- கம்பில் அரிசியை விட எட்டு மடங்கு இரும்புச்சத்து உள்ளது.
- கம்பு சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்
கம்பு – 1 கப்
பால் -1 ½ கப்
தயிர் ½ கப்
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
பெருங்காயம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை
* பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கம்பை புடைத்து சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்து கொள்ளவும்.
* உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், சேர்த்து தாளித்த பின் அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.
* கடைசியாக, உப்பு, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி.