- சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது போல்டபில் போன் மட்டுமின்றி கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி Z ப்ளிப் 4, கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை விவரங்கள் ஆகும். புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமின்றி கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் விலை விவரங்களும் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கியது. முன்பதிவு துவங்கியதும் இந்த ஸ்மார்ட்போனின் நிற ஆப்ஷன்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியானது.
பிரபல டிப்ஸ்டரான ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோபர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மாடல்களின் விலை விவரங்கள் இடம்பெற்று உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் விலை விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் 256 ஜிபி வேரியண்ட் 1799 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 400, 512 ஜிபி வேரியண்ட் 1919 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 வரை நிர்ணயம் செய்யப்படலாம். கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் 128 ஜிபி வேரியண்ட் விலை 1109 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 89 ஆயிரத்து 600 என்றும் 256 ஜிபி விலை 1169 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 94 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
கேலக்ஸி வாட்ச் 5 (40mm) ப்ளூடூத் மாடலின் விலை 299 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 200 என்றும் 4ஜி வேரியண்ட் விலை 349 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 200 வரை நிர்ணயம் செய்யப்படலாம். கேலக்ஸி வாட்ச் 5 (44mm) ப்ளூடூத் மாடல் விலை 329 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 600 என்றும் 4ஜி வேரியண்ட் விலை 179 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரத்து 600 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ (45mm) ப்ளூடூத் மாடல் விலை 469 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 900 என்றும் 4ஜி மாடல் விலை 499 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 300 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.