Loading...
ஆளுநரை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சசிகலா ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்தார்.
தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து இன்று அதிகாரிகளுடனும், காவல்துறையினரிடமும் ஆலோசித்த பின்னர் உள்துறை அமைச்சகத்திற்கு 3 பக்க அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வித்தியாசாகராவ்.
அந்த அறிக்கையில், ஓபிஎஸ், சசிகலா கோரிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள், காவதுறையினர் அளித்த தகவலை தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் சிறைப்பிடிக்கப்ப ட்டுள்ளதாக காவல்துறை தந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Loading...