விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.
விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.
காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விநாயகரை வழிபடும் முறைக்கு ‘காணாபத்யம்’ என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர், ஆதிசங்கரர்.
விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. தும்பிக்கையில் தண்ணீர் குடம் தாங்கியும், பின் இரண்டு கரங்களில் அங்குசம், பாசம் ஏந்தியும், முன் வலது கரத்தில் தந்தம், முன் இடது கரத்தில் மோதகமும் வைத்திருப்பார்.
விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.
மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் எழுதினார்.
விநாயகருக்கு மூஷிகம் (எலி) வாகனத்தைத் தவிர, மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளன.
வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் கொண்டு பூஜிப்பதோடு, கணபதி ஹோமம் செய்து வந்தால் நீண்ட ஆயுளும், செல்வமும் வந்துசேரும்.
‘ஓம் ஹம் கணபதியே நமஹ’ என்ற விநாயகர் மந்திரத்தை, காலையும், மாலையும் 108 முறை சொல்லி வந்தால், சகல நன்மைகளும் உண்டாகும்.
பஞ்சபூதத்தோடு தொடர்புடையவராகவும் விநாயகர் இருக்கிறார். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவமாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆலய மரத்தடியில் மண் வடிவமாகவும், வன்னி மரத்தடியில் நெருப்பு வடிவமாகவும் விளங்குகிறார்.
விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.
விநாயகரின் உருவத்தில் அனைத்து கடவுள்களும் வாசம் செய்கின்றனர். நாபி (தொப்புள்)- பிரம்மதேவர், முகம்- விஷ்ணு, கண்- சிவன், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம்- சூரியன் உள்ளனர்.
விநாயகருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும் விட தேங்காய் எண்ெணய் காப்புதான் பிரியமானது.
‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘இவரை விட மேலானவர் இல்லை’ என்று பொருள்.
வைணவக் கோவில்களில் வீற்றிருக்கும் விநாயகர், ‘தும்பிக்கையாழ்வார்’ என்று அழைக்கப்படுகிறார்.
விநாயகருக்கும், சனி பகவானுக்கும் பிரியமானது, வன்னி மரம். இந்த மரத்தின் இலைகளால் விநாயகரை பூஜித்து வழிபட்டால் சனி பகவான் தோஷம் நம்மை நெருங்காது.