முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் 44 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும், சஞ்சு சாம்சன் 30 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச அரங்கில் 16,000 ரன்களைக் கடந்த 7வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
அவர் டெஸ்டில் 3,137 ரன்னும், ஒருநாள் போட்டியில் 9,376 ரன்னும், டி20 போட்டியில் 3,487 ரன்னும் எடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி, வீரேந்திர சேவாக் மற்றும் எம்,எஸ்,டோனி ஆகியோர் 16,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.