அமெரிக்க அதிபரின் நிர்வாகம், தற்காலிகப் பயணத் தடை உத்தரவையொட்டிய வழக்கில் வெல்லும் எனத் திரு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கடப்பாடு தெரிவித்தார். ஏழு முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது எனத் திரு டிரம்ப் போட்ட உத்தரவைத் தொடர்ந்து தடைசெய்ய வேண்டும் என நேற்று முன்தினம் நீதிமன்றம் முடிவெடுத்தது.
எனினும் அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் எனத் திரு டிரம்ப் வலியுறுத்தினார்.
அடுத்த வாரத்துக்குள் பாதுகாப்பின் தொடர்பில் கூடுதல் அம்சங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தீங்கு விளைவிக்க எண்ணுவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்றார் திரு டிரம்ப்.