Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்து தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறி ஜனாதிபதி வீட்டிற்கு அருகில் சுற்றித்திரிந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை குருந்துவத்தை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் அவரிடம் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
2011ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் வரை கோட்டை நகரசபை உறுப்பினராக தான் செயற்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...