இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாத அந்த அணி 15.4 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹெட்மயர் 56 ரன்கள் அடித்தார். ஹோல்டர், கீமோ பால், ஒடியன் ஸ்மித், ஓபேட் மெக்காய் ஆகியோர் டக் அவுட்டானார்கள். இதையடுத்து இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது.
சர்வதேச டி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறை. அக்சர் படேல் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தைத் தொடங்கினார். பின்னர் குல்தீப் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் எஞ்சிய ஏழு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.