Loading...
ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா விமானம் மூலம் விஜயவாடாவுக்கு வந்தார்.
அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய ஆந்திர போலீசார், தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றனர். தனக்கு அழைப்பு வந்திருப்பதாக கூறிய ரோஜா அதை போலீசாரிடம் காட்டினார்.
Loading...
ஆனால், ரோஜாவை தடுத்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்தார். ரோஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று விஜயவாடா போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Loading...