Loading...
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதையடுத்து அவரே அங்கு நேரடியாக செல்லவுள்ளார்.
சசிகலா தலைமையில் அரசு அமைய ஆதரவு தர வேண்டும் என கூறி 100க்கும் மேற்ப்பட்ட எம்.எல்.ஏக்கள் சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் என்ற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதில் பலரும் தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
Loading...
இதனால் கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனை மன்னார்குடி கோஷ்டியால் சமாளிக்க முடியவில்லை.
இந்த தகவல் சசிகலாவுக்கு சொல்லப்பட்டதையடுத்து, எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேச நேரில் செல்கிறார்.
Loading...