வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் 6 வில்லன்கள் என்றும் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் உள்ளிட்ட பலரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்து இருந்தார்.
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிஷா தற்போது மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார்.