Loading...
நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று இயற்கையான உணவுகள் மற்றும் பானங்கள்.
அந்த வகையில், கேரட் மற்றும் வேப்பிலை முக்கியமான ஒரு உணவாகும். எனவே 2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை சாறு, 4 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, தினமும் காலையில் உணவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும்.
Loading...
இதேபோல் இந்த ஜூஸை தொடர்ந்து மூன்று மாதத்திற்கு குடித்து வந்தால், நமது உடலிற்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
வேப்பிலை கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- கேரட் மற்றும் வேப்பிலை கலந்த ஜூஸில் உள்ள லிமோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது குடலில் உள்ள டாக்ஸின்களை சுத்தம் செய்து அவற்றை வெளியேற்றி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- வேப்பிலை கலந்த இந்த பானத்தில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, சருமத்தை பொலிவாக்குகிறது.
- நமது கண் பார்வையை மேம்படுத்தும் விட்டமின் A இந்த பானத்தில் அதிகம் உள்ளது. எனவே இந்த பானத்தை நாம் தினமும் குடித்தால், கண் பார்வை நரம்புகளை வலிமையாக இருக்கும்.
- கேரட் கலந்த வேப்பிலை ஜூஸில், நொதிகள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், இது நமது உடம்பில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, காய்ச்சல் மற்றும் இதர தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த ஜூஸை குடிப்பது நல்லது. ஏனெனில் இந்த ஜூஸில் உள்ள ப்ளேவோனாய்டுகள் நமது உடம்பின் செரிமானத்தை தூண்டி, பசியின்மை பிரச்சனையை தடுக்கிறது.
- நமது உடம்பில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நார்ச்சத்து இந்த பானத்தில் அதிகமாக உள்ளது. எனவே இது நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
- நமது உடம்பின் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த பானத்தில் அதிகமாக உள்ளதால், இது கல்லீரலை சுத்தம் செய்து, கல்லீரலின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Loading...