இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த விரதம் அனுஷ்டித்தால் ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகமாகும்.
ஆடி மாத தேய்பிறை துவிதியை தினத்தில் ஸ்ரீகிருஷ்ணர், மகாலட்சுமியுடன் சுகமாக தூங்கும் நாள் ஆகும். இன்று (சனிக்கிழமை) இந்த துவிதியை திதி தினம் வருகிறது. இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணர் சிலை அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து வழிபட வேண்டும் கிருஷ்ணருக்கு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.
புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை தலையணை போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு கிருஷ்ணா, எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கி றீர்களோ அப்படியே நானும் எனது மனைவியுடன்-கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்று சேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும் என்னும் சுலோகம் சொல்லி பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர், லட்சுமி விக்ரகங்களுக்கு பூஜை செய்ய வேண்டும். கிருஷ்ணரை படுக்க வைத்த அந்த புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர் வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்-மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகமாகும்.