புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 13வது அரசியலமைப்பில் உள்ள அதிகார விடயங்களுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழு இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும்போது பெறப்பட்ட அனுபவங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது உள்ளடக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளன.
இதனை மையமாகக்கொண்டே அண்மையில் வடக்கின் முதலமைச்சரின் நடவடிக்கைகளை கண்டித்த அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, விக்னேஸ்வரனின் செயல்களால் புதிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்திருந்தார் என்பதையும் அரசாங்க தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.