Loading...
வாலு இயக்குனர் விஜய் சந்தர் அடுத்து சீயான் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதில் விக்ரம் வடசென்னை ரவுடியாக நடிப்பார் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு இந்த வாரம் தான் துவங்கியுள்ளது.
விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் சூரி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Loading...
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் பற்றிய செய்தி வந்துள்ளது. பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்த RK சுரேஷ் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
RK சுரேஷின் இரண்டு படங்களிலும் மிகவும் கொடூர வில்லனாக நடித்திருப்பார், அதனால் விக்ரம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பற்றி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Loading...