Loading...
சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை சென்றிருந்த 47 வயதுடைய பெண் ஒருவரிடம் கடந்த திங்கட்கிழமை சந்தேகநபர்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
Loading...
31 மற்றும் 40 வயதுடைய இருவர், குறித்த பெண்ணை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, அதிக நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
சந்தேகமடைந்த குறித்த பெண், சுங்க அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்கியதை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...