Loading...
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிபோட்டியில் சிமோனா ஹாலெப், மியாவுடன் மோதினார்.
இதில் சிமானோ ஹாலெப் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
Loading...
இதில் ரோமானியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மியா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், சிமோனா ஹாலெப் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Loading...