முன்னாள் மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைத்து நீக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, வென்னப்புவ பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
வடமேல் மற்றும் மேல்மாகாண சபைகளை இணைக்கும் மகா ஓயா ஊடாக அமைக்கப்படும் பாலம் தொடர்பிலான நிகழ்வினை முன்னிட்டு கொச்சிக்கடை பிரதேசத்தில் வைக்கப்பட்ட பதாதையே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
எனினும் நேற்றைய தினம் மாகாண சபை உறுப்பினர் இதனை முற்றாக நீக்கிவிட்டு, வேறெரு பகுதியில் வைக்க வேண்டிய பதாகையை அங்கு வைத்துள்ளனர் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் இந்த யோசனையை முன்மொழிந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் இதனை நடைமுறைப்படுத்திய மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படமும் அதில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.