உணவு என்பது சுவைக்காக மட்டும் சாப்பிடுவதில்லை. அதில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது என பார்த்தே அதை சாப்பிட வேண்டும்.
நாம் உண்ணும் பல உணவுகளில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுவதுமாக உடலுக்கு கிடைப்பதில்லை.
அப்படி, நாம் அதிகம் விரும்பி உண்ணும் சில உணவுகளின் கலப்படங்கள் பற்றி காண்போம்
Cakes
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்கானது பழங்கள், வெண்ணெய், பால் போன்றவற்றால் தான் முழுவதும் செய்யப்படுகிறதா? அதான் இல்லை
உருளைகிழங்கு புரதம் மற்றும் செயற்கை வாசனை பொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது. இது தான் அதன் சுவையை தனிதுவமாக காட்டுகிறது.
Tomato sauce
பல உணவுகளுக்கு தொட்டு சாப்பிட பயன்படும் Tomato sauceல் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தக்காளி பயன்படுத்தப்படுகிறது.
இது கெட்டியாக இருந்தால் நல்லது. தண்ணீராக இருந்தால் அதில் அதிகளவு கஞ்சிபசை போன்ற செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றாலே இயற்கையானது தான் என நம்புகிறவர்கள் பலர். பல பழங்களில் சிட்ரிக் ஆசிட் கலக்கப்படுகிறது. இதன் மூலம் பல நாட்கள் கெடாமல் இருப்பது போல தோற்றத்தை இது உருவாக்கும்.
முக்கியமாக புற்றீசல் போல ஆங்காங்கே முளைத்திருக்கும் சூப்பர் மார்கெட்களில் இது அதிகம் நடக்கிறது.
சாக்லேட்கள்
விதவிதமாக வெளிவரும் சாக்லேட்கள் அனைத்திலுமே நச்சு தன்மைகள் கொண்ட செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். குறைந்த அளவில் இதை உட்கொள்ளுதல் நலம்.