- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நேற்று ஜெயிலர் படத்தின் அறிவிப்பு (22.8.2022) காலை 11:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.