- ராஜ்மா இருதயத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை தருகிறது.
- பாதாம் கொலஸ்டிராலை குறைக்க வல்லது
நம்முடைய ரத்தக் குழாய்கள்தான் ஆக்சிஜன் நிறைந்த, சத்துக்கள் நிறைந்த ரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுவிற்கும் கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் மிகவும் குறைந்த ரத்தத்தினை சீர் செய்ய இருதயத்திற்கு கொண்டு வருகின்றன. ஆர்டரீஸ், வெயின்ஸ் என்று இவை பிரிந்து கூறப்பட்டாலும் ரத்த குழாய்கள் மூலம் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம், ஊட்டம் பெறுகின்றது.
கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. இது நமது உடலின் போக்குவரத்துப் பிரிவு இதில் இந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா? அடைப்பு ஏற்படும் இடத்திற்கு ஏற்ப பாதிப்புகள் ஏற்படுகின்றன. பக்க வாதம், மாரடைப்பு இவை இரண்டும் நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தைகள்தான். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ஏற்படும் இத்தகு பிரச்சினைகள் நிறைய உள்ளன.
ராஜ்மா என்று சொல்லப்படும் அடர்ந்த பீன்ஸ் இருதயத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை தருகிறது. மக்னீசியம் ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இது உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது. அதிக கொலஸ்டிரால், உயர் ரத்த அழுத்தம் இரண்டினையும் குறைக்க வல்லது. கைப்பிடி அளவு உட்கொண்டாலே போதும். ஒமேகா 3 நிறைந்த சால்மன் டியூனா இருதய துடிப்பினை சீர் செய்யவும், உயர் ரத்த அழுத்தம் குறையவும் உதவுகின்றது.
ஆலிவ் எண்ணெய், நம்ம ஊர் சமையலுக்கு ஏற்ற வகையிலும் வந்துள்ளது. ஓரிரு டீஸ்பூன் சேர்ப்பது இருதய பாதுகாப்பிற்கு நல்லது.
வால்நட்-இருதய ரத்த குழாய்களின் வீக்கத்தினை நீக்குகின்றது. ஒமேகா 3 சத்து நிறைந்தது.
* பாதாம் கொலஸ்டிராலை குறைக்க வல்லது
* சோயாவில் தயாரிக்கப்பட்ட ‘டோஃபு’ தாது உப்புகள், நார்த்சத்து கொண்டது.
* சர்க்கரை வள்ளி கிழங்கு- நார்ச்சத்து, வைட்டமின் ஏ லைகோபேன் (சர்க்கரை நோய், இருதய நோய் பாதிப்பினை குறைக்க வல்லது)
* ஆரஞ்சு-ரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
* பார்லி அரிசி கொலஸ்டிரால் அளவினை குறைக்க வல்லது.
* ஓட்ஸ்-எல்.டி.எல். கொலஸ்டிராலினை குறைக்கும்.
* பிளாக்ஸ் விதைகள்- ஒமேகா 3 சத்து நிறைந்தது.
* கீரை வகைகள், பூண்டு, கிரீன் டீ, தக்காளி இவைகள் அனைத்துமே மருத்துவ அமிர்தம்தான்.
* மாதுளை பழம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் வேண்டும்.
* சர்க்கரை, சிகப்பு அசைவம் இவற்றினை தவிர்த்து விடுவது நல்லது.
* கேக், பீட்சா போன்ற பிரிவுகளை அடியோடு நீக்கி விட வேண்டும்.