தற்போதைய போயஸ் கார்டன் வீடு அமைந்து இருக்கும் இடத்தை அவரது தாய் சந்தியா 1972 களில் பார்த்து பார்த்து கட்டியபோது ஜெயலலிதா முன்னணி ஹீரோயின்.
சந்தியா மேற்பார்வையில் கட்டப்பட்டு, கிரகப்பிரவேசத்திற்கான நாள் குறிக்கப்பட்ட போது, சந்தியாவின் உடல் நிலை மோசமானது. ஒரு புறம் கிரகப்பிரவேசத்திற்கான வேலைகள். மறுபுறம் அம்மா வின் உடல் நிலை என்று ஜெயலலிதா தவித்தபோது அவரின் வயது 23.
வங்கியில் என்ன இருக்கிறது? வீட்டுக்கு என்ன வாங்கவேண்டும் என்று கூட தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா.
ஆனாலும், எம்.ஜி.ஆர் உதவி செய்ய ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகிறார் சந்தியா. சந்தியாவின் அறுவை சிகிச்சையில் உடனிருக்கும் ஜெயலலிதா அவர் இறப்பதை நேரடியாக காண்கிறார். திக்பிரமை அடைந்து நின்று கொண்டு இருந்த ஜெயலலிதா கண்ட முதல் மரணம் அது.
ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் அம்மாவை வைத்து அழகு பார்க்க நினைத்த ஜெயலலிதாவில் அது முடியவே இல்லை.
கிரகப்பிரவேசம் பண்ண நாள் குறிக்கப்பட்ட வீட்டிற்கு மைசூரில் வாழ்ந்த ஜெயா விலாஸ் பேரை சூட்ட முடிவு செய்திருந்தனர் தாயும் மகளும். ஆனால், விதி வேறாக இருக்க, சந்தியாவின் இயற்பெயரான வேதவல்லியின் பெயரில் இருந்து வேதா இல்லம் என்று பெயர் வைத்து, தாயின்றி ஜெயலலிதா குடியேறினார்.
அந்த கிரகப்பிரவேசம் நடந்த ஆண்டு 1972-ம் ஆண்டு மே 15-ம் நாள்.
இப்போ சொல்லுங்க, போயஸ் கார்டன் வேதா நிலையம் யாருக்கு சொந்தம்?
இந்த சூழலில் அவரின் சொத்துக்களை குறிப்பாக போயஸ் கார்தான் வேதா இல்லத்தை இளவரசி பேருக்கு எழுதி வைத்துவிட்டார் ஜெயலலிதா என்ற செய்திக்கு பொதுமக்களிடம் கோப பதிவுகள்.