ஜேர்மனி நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜேர்மனி நாட்டில் குளிர்காலத்தில் பரவும் H3N3 வகை வைரஸ் காய்ச்சல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து 43000 பேர் இதுவரை இந்த காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 14000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர். பலர் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.இந்த வைரஸ் முக்கியமாக அதிகம் பேர் வாழும் வீடுகளிலும், குழந்தைகளிடமும், 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்களிடமும் வேகமாக பரவுகிறது.
அதிகபட்சமாக தெற்கு ஜேர்மனியில் 6275 பேரும், குறைந்தபட்சமாக வடமேற்கு ஜேர்மனியில் 1115 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையில், மக்கள் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது