- ஐக்கிய அரபு அமீரகத்தை ஹாங்காங் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது.
நேற்று இரவு நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதிய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ஆங்காங் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இலக்கை நோக்கி விளையாடிய ஆங்காங் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆங்காங் அணி தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் அந்த அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது.
ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன.
இந்த அணி முதல் போட்டியில் சிங்கப்பூரை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்து குவைத்தை எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.