- தைராய்டு பிரச்சனைக்கு ஆசனப்பயிற்சிகள் பயனுள்ளதாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
- தினசரி தியானம் பழகி வந்தால் தைராய்டு ஹார்மோன் சுரப்பி சீராகும்.
தைராய்டு கோளாறால் அதிகரித்த உடல் எடை குறையவும், அதனால் உண்டாகும் மனஅழுத்தம் குறையவும் பல்வேறு ஆசனப்பயிற்சிகள் பயனுள்ளதாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. சாவாசனம், சர்வாங்காசனம், உஷ்ட்ராசனம், அர்த்தகட்டி சக்ராசனம், புஜங்காசனம், சலபாசனம், நவாசனம், ஜானு சிரசாசனம், சேது பந்தாசனம், வஜ்ராசனம், பாத ஹஸ்தாசனம் ஆகிய இவற்றுடன் சூரிய வணக்கமும், மூச்சு பயிற்சியும், தியானமும் தினசரி பழகி வந்தால் தைராய்டு ஹார்மோன் சுரப்பி சீராவதோடு, உடல் எடை குறையும். மன அழுத்தம் நீங்கி மாதவிடாய் சீராகும் என்கிறது ஆய்வுகள்.
அதிலும் முக்கியமாக சர்வாங்காசனம் பழகி வருவது தைராய்டு சுரப்பியை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இது கழுத்து பகுதிக்கும், அப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க உதவும்.
பரம்பரை வழியாக வரும் தைராய்டு குறைவு நோயினை கண்டு அஞ்சி வருந்தும் மகளிர் தினசரி மஞ்சளை பாலில் கலந்து எடுத்துக்கொள்வதுடன் சர்வாங்காசனம், தியானம் ஆகியவற்றை பழகுதல் மூலம் ஹைப்போதைராய்டு வராமல் தடுக்க முடியும்.
இவ்வாறு உணவே மருந்தாகவும், மூலிகையே மருந்தாகவும் பயன்படுத்தி எமனை வென்றவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் வழியை பின்பற்றி வாழ்ந்தால் தைராய்டு கோளாறுக்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு நோய்நிலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.