பிரித்தானியாவில் பிரஸ்டன் மாநகரில் நடந்த விபத்து ஒன்றில், 11 வயதுப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். M61 நெடுஞ்சாலையில் இது நடந்துள்ளது. ஆசிய இன குடும்பம் ஒன்று காரில் சென்றவேளை. கடும் பனி மூட்டம்(FOG) காணப்பட்டுள்ளது. எதிரே வந்த கார் நேருக்கு நேர் இவர்களது காரோடு மோதியுள்ளது. இதனால் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தார்கள். இன் நிலையில் தனது 3 வயது மச்சாளோடு பின் சீட்டில் இருந்த குறித்த 11 வயதுப் பெண்.
அவரை காப்பாற்ற முனைந்துள்ளார். காரில் இருந்து , அப்பா , அம்மா மற்றும் தங்கை ஆகியோர் இறங்கிவிட்டார்கள். ஆனால் இந்த 11 வயதுச் சிறுமி, 3 வயது மச்சாளை வெளியே கொண்டுவர முயற்ச்சி செய்தவேளை. அவ்வழியே வந்த லாரி இவர்கள் கார் மேல் மோதியுள்ளது. இதனால் 11 வயதுப் பெண் மரணமடைந்துள்ளார். மேலும் அவரது அப்பா மற்றும் மச்சாள் ஆகியோர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளார்கள்.
லண்டனில் தற்போது பல இடங்களில் பனி மூட்டம் அதிகம் காணப்படுகிறது. தமிழர்களே நீங்கள் காரை ஓட்டுவது மிகவும் அவதானம். வழமையாக கார் விபத்திற்கு உள்ளாகி இறப்பவர்களை விட. ஒரு விபத்து நடந்தால் காரில் இருந்து உடனே இறங்கி பாதுகாப்பான ஒரு இடத்திற்கு உடனே செல்வது அவசியம். ஏன் எனில் எப்பொழுது மற்ற வாகனம் உங்கள் வாகனம் மீது மோதும் என்று சொல்லவே முடியாது. இச்செய்தியை வாசித்த பல இன மக்கள், இப்பெண்ணை ஹீரோ என்று வர்ணித்துள்ளார்கள். ரியல் ஹீரே இவர் தான்…