மாண்புமிகு எங்கள் ஊர் எம்.எல்.ஏக்களே உங்களுக்கு வாக்களித்த ஒரு தமிழனின் மனசாட்சியின் குரல். இதுவரை எங்கள் வாழ்வாதாரங்களைள முன்வைத்து குடிநீர், தரமான சாலைகள், மின்விளக்குகள் மற்றும் பள்ளி வசதி கேட்டுதான் மனுக்கள், விண்ணப்பங்கள் கொடுத்துள்ளோம்.
முதல்முறையாக எங்களுக்காக ஒரு முதல்வரை கேட்கிறோம். 134 தொகுதி எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்குதான் ஆதரவு என்ற செய்திகள் வருகின்றன. ஆனால் 234 தொகுதி மக்களின் ஆதரவும் பன்னீர் செல்வத்திற்குதான்.
ஆகையால் எங்கள் ஊர் எம்.எல்.ஏவாகிய நீங்களும் பன்னீர் செல்வத்தைதான் ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டமன்ற அலுவலகங்கள் புறக்கணிக்கப்படும். இது எங்களின் வேண்டுகோளோ, விண்ணப்பமோ இல்லை. எங்களின் ஆணை. இதனை செய்யும் பட்சத்தில் நாங்கள் பெருமை அடைவோம். ஒரே ஒரு முறை மனசாட்சியின் குரல் கேட்டு செயல்படுங்கள்