Loading...
முருங்கை கீரையில் பொரியல் செய்வது வழக்கம்.
முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை – 1 கப்
வாழைத்தண்டு – சிறிய துண்டு
வெங்காயம் – 1
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
Loading...
சிகப்பு மிளகாய் – 1
கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை :
- முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.
- வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
- வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.
- சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
Loading...