இலங்கையில் உள்ள வங்கிகளின் செயற்பாடு விரைவில் முடங்கும் அபாய நிலை நிலவுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வங்கிகள் ஊடாக பெற்ற கடன்களை பல வங்குரோத்து அரச நிறுவனங்கள் செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 2021ஆம் ஆண்டு அரசாங்கம் சுமார் 200 பில்லியன் ரூபாவை கல்வி நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம்
அதேவேளை, அந்த ஆண்டில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தில் மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இதுவரையில் ஏற்பட்ட நட்டம் 700 பில்லியனை அண்மித்துள்ளது. இவ்வாறான சூழலில், சர்வதேச நாணய நிதியத்தின் மீது முழு நம்பிக்கை வைப்பதை விட, நாட்டிற்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி
அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் இலவசக் கல்வியின் பெறுமதியை அவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக நாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு துறைகள் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.