குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.
இவரின் திருமாணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அஜித்துடன் வலிமை, சந்தானத்துடன் சபாபதி, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் புகழ் தனது காதலி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அப்போது நானும் பென்சியும் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும். இந்த வருடம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என புகழ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புகழ்-பென்சியின் திருமண தேதி தற்போது வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்ந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகினறனர்.