தேசிய பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணத்தை வனவிலங்குத் திணைக்களம் இருமடங்காக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்டணம் உயர்வு
இதற்கு முன்னர் ஒருவருக்கு ரூ.9,688 ஆக இருந்த கட்டணம் தற்போது 5,232 ரூபாவினால் அதிகரித்து 14,920 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுற்றுலாத்துறையினர் கூறுகையில், பூங்காக்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் இவ்வளவு தொகையை வசூலிப்பதை ஏற்க முடியாது எனவும் விசனம் தெரிவித்துள்னர்.
சுற்றுலாப்பயணிகளின் வருகை
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 37,760 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இது ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 649.2 சதவீத வளர்ச்சியாகும்.
இதற்கமைய, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதுவரை 4,96,430 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.