3 டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ம் தேதியும், 3-வது போட்டி 25-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
மேலும், இத்தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடர் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6ல் தொடங்கி 11 வரை நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.