கருவாடு பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது. கருவாட்டை எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா?
அப்படி எந்தெந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிடக் கூடாது என்றும் யாரெல்லாம் கருவாட்டை சாப்பிடக் கூடாது எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த உணவுகளுடன் கருவாடு சாப்பிட்டால் ஆபத்து
மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால் மற்றும் தயிர் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் வெண் மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.
கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இப்படி சாப்பிட்டால் புட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கருவாடு சமையல் செய்யும் போது அவற்றுடன் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகைகளை சேர்த்து சமைத்தால் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஏற்படுவதை தடுக்கும்.
யாரெல்லாம் கருவாட்டை சாப்பிடக் கூடாது?
சருமத்தில் அழற்ச்சி பிரச்னை உள்ளவர்கள் கருவாட்டை தொடவே கூடாது. ஏனென்றால் இது சருமத்தில் நமைச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.
கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ள கூடாது. கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது. ஏனென்றால் சைனஸ், சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.