வம்சி இயக்கிவரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பில் சரத்குமார், பிரபுவுடன் எடுத்தபுகைப்படங்களை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
வம்சி இயக்கிவரும் வாரிசு படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 100-வது நாளை எட்டி உள்ளது. இதில் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில் குஷ்புவும் வாரிசு படப்பிடிப்பில் தன்னோடு நடித்த சரத்குமார், பிரபு ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவர்கள் இருவருடன் இருந்தால் ஒருபோதும் சோகமான மனநிலை இருக்காது என்ற பதிவையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
சரத்குமாருடன் நாட்டாமை படத்திலும், பிரபுவுடன் சின்னத்தம்பி படத்திலும் குஷ்பு நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. நீண்டகால இடைவெளிக்கு பிறகு இருவருடன் இணைந்து நடிக்கும் மகிழ்ச்சியில் இந்த புகைப்படங்களை குஷ்பு வெளியிட்டு இருக்கிறார். வாரிசு படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் படத்தின் டிரைலரை தீபாவளிக்கு வெளியிடவும், படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.