Loading...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கையில் ஏன் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான உண்மையை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading...
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
அமைச்சரின் வாக்குறுதியின்படி விலைச்சூத்திரத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Loading...