எதிர்வரும் 13,14.ஆம் திகதி காலை 8.00மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை வவுனியா நகரில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படும் என வவுனியா மின்சார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு தடையை எதிர்நோக்கும் பிரதேசங்கள் வருமாறு……………
இதன் படி, தெற்கிலுப்பைக்குளம், வெளிக்குளத்திலிருந்து குடாகச்சக்கொடி வரை ,கோவிற்குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வவுனியா நகரத்திலிருந்து போகஸ்பவ வரை , தெற்கு பிள்ளையார்குளம் , ஓவியா விடுதி , எஸ்.வீ.ஆர் அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, முதலாம் குறுக்குத்தெரு வவுனியா, ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நெளுக்குளத்திலிருந்து பறயனாளங்குளம் வரை , பறயனாளங்குளத்திலிருந்து முகத்தான் குளம் வரை, பூவரசங்குளத்திலிருந்து கங்கன் குளம் வரை , பிரமனாளங்குளத்திலிருந்து பெரியதம்பனை வரை , வவுனியா நகரம் , பூங்கா வீதி , புகையிரத நிலைய வீதி , வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து கண்டி வீதி , மதவு வைத்தகுளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை , கத்தார் சின்னக்குளம் பகுதிகளிலும் ஏற்படும் என குறிப்பிடப்டுகின்றது
இதனைத் தொடர்ந்து மகாறம்பைக்குளம் , பூந்தோட்டம், வைரவப்புளியங்குளம், குருமன்காடு, பட்டானீச்சூரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரை, கூமாங்குளத்திலிருந்து நொச்சிக்குளம் வரை, நெளுக்குளத்திலிருந்து பெரியநொச்சிக்குளம் வரை, பெரியநொச்சிக்குளத்திலிருந்து செட்டிக்குளம் வரை, வவுனியா வைத்தியசாலை போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.