Loading...
- தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- எந்த கீரையை சாப்பிட்டால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
* அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
* காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்; உடல் வெப்பத்தை தணிக்கும்.
* மஞ்சள் கரிசாலை – கல்லீரலை பலமாக்கும்; காமாலையை விலக்கும்.
* புளியங்கீரை – சோகையை விலக்கும்; கண் நோய் சரியாகும்.
* பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
* புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கும்; அஜீரணத்தைப் போக்கும்.
Loading...
* வல்லாரைக் கீரை – மூளைக்கு பலம் தரும்.
* நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
* முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும்; நரம்பு பலமடையும்.
* கல்யாண முருங்கை கீரை – சளி, இருமலை அகற்றும்.
* துத்திக்கீரை – வாய்ப் புண், வயிற்றுப்புண் நீக்கும். வெள்ளை மூலம் சரியாகும்.
* முள்ளங்கி கீரை – நீரடைப்பு நீங்கும்.
Loading...