இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.
இப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன் இணைந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து, ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதில் டாக்டர், டான் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் மகளிர் மட்டும், சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன், சுழல் உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதிதா சதிஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.