அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய நிர்வாகத்துடன், இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது.
தற்போது இடம்பெறுகின்ற கலந்துரையாடலுக்கு அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தலைமை தாங்குகின்றார்.
இரு நாடுகளுக்கும் தாக்கம் செலுத்தும் சில விடயங்கள் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு ஏற்பட கூடிய அழுத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இணைந்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாடு மற்றும் கொள்கையினுள் இலங்கைக்கு எவ்வித சாதகமற்ற நிலைமைகள் இதுவரையில் காணப்படவில்லை என அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.