- ஹானர் நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது.
- ஜூலை மாத வாக்கில் இதே டேப்லெட் மாடல் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹானர் பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இது ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஆகும். இதில் 12 இன்ச் 2K எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5MP பிரைமரி மற்றும் செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
6.9 மில்லிமீட்டர் அளவில் மெட்டல் பாடி கொண்டிருக்கும் ஹானர் பேட் 8 மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர்கள், ஹானர் உருவாக்கிய ஹிஸ்டன் ஆடியோ டியுனிங், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 7250 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ஹானர் பேட் 8 அம்சங்கள்:
12 இன்ச் 2000×1200 பிக்சல் 2K டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ 610 GPU
4 ஜிபி / 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1
5MP பிரைமரி கேமரா
5MP செல்பி கேமரா
8 ஸ்பீக்கர்கள், ஹானர் ஹிஸ்டன் சவுண்ட், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா
வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி
7250 எம்ஏஹெச் பேட்டரி
22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் 8 மாடல் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.