- சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
- முன்னதாக இந்த ஹெட்போன் மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோனி நிறுவனத்தின் WH 1000XM5 நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட புது ஹெட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி WH 1000XM5 மாடலில் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 உள்ளது. இது சோனியின் ஹெச்டி தர நாய்ஸ் கேன்சலிங் பிராசஸரின் முழு திறனை வெளிக்கொண்டு வரும்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 மில்லிமீட்டர் டிரைவர் யூனிட், எடை குறைந்த, உறுதியான டோம் கார்பன் பைபர் பாகங்களை பயன்படுத்தி சவுண்ட் தரத்தை அதிக இயற்கையாக மாற்றுகிறது. இதில் கூகுள் பாஸ்ட் பேர் அம்சம் உள்ளது. இதை கொண்டு ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் மிக எளிதில் கனெக்ட் செய்து விட முடியும். இத்துடன் LDAC கோடெக் சப்போர்ட், DSEE எக்ஸ்டிரீம் மற்றும் நுனுக்கமாக வாய்ஸ் பிக்கப் செய்யும் திறன் உள்ளிட்டவை இந்த ஹெட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.
சோனி WH 1000XM5 மாடலில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இது ஆம்பியண்ட் சவுண்ட் செட்டிங்ஸ்-ஐ தலைசிறந்த அனுபவம் கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றுகிறது. மேலும் மல்டி பாயிண்க் கனெக்ஷன் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு ப்ளூடூத் சாதனங்களுடன் கனெக்ட் செய்ய முடியும். இந்த ஹெட்போன்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், டிசைன் மாற்றப்பட்டு இருப்பதால், சோனி WH 1000XM5 ஹெட்போனை மடிக்க முடியாது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இத்துடன் யுஎஸ்பி சி பவர் டெலிவரி மூலம் மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்தியாவில் சோனி WH 1000XM5 ஹெட்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் மற்றும் shopatsc வலைதளங்களில் இந்த ஹெட்போனிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஹெட்போன் ரூ. 26 ஆயிரத்து 990 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.