இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’.
இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில், அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
நித்தம் ஒரு வானம்
வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் ‘ஆகாசம்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து போஸ்டர்களை வெளியிட்டது.
நித்தம் ஒரு வானம்
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.