Loading...
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நேற்று அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தெரிவு செய்யப்பட்ட வழங்குனர்கள் உரிய டெண்டரை நிறைவேற்ற முடியாது என அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு நிலக்கரி பெறுவதற்கான புதிய டெண்டருக்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Loading...