நாட்டின் நெருக்கடி நிலை
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நாடு இன்று நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றதன் பிரதான பொறுப்பு சில உயர் அதிகாரிகளைச் சாரும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சில ஆலோசனைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு வழங்கப்பட்டது.
கோட்டாபயவை பிழையாக வழி நடத்தியவர்கள்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோர் இவ்வாறு கோட்டாபயவை பிழையாக வழிநடத்தியவர்களில் முதன்மையானவர்கள்.
உயர் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு விலகவும், நாட்டை விட்டுச் செல்லவும் நேரிட்டது என குறிப்பிட்டுள்ளார்.