பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படக்குழு
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, “இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது” என்று பேசினார்.