- விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
- நயன்தாரா வாழ்க்கை பயணம் குறித்த புரோமோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
அண்மையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண வீடியோவின் புரோமோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவின் வாழ்க்கை பயணம் குறித்த புரோமோவை தற்போது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.