அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வர மக்கள் அதிகாரத்தை வழங்கிய போதிலும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது மக்கள் பீதியில் வாழ்வதாகவும் தெற்கிலும் வடக்கிலும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்கின்றன.
துப்பாக்கிச் சத்தங்களை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் நிறுத்தினோம்.
தற்போது நடக்கும் இந்த சம்பவங்களின் பின்னணியில் யார் இருந்தாலும் இதன் மூலம் நாட்டின் சமூகம் வேறு திசை நோக்கி திருப்படும் நிலைமை உருவாகும்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர மக்கள் இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரவில்லை.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து வடக்கு கிழக்கை இணைந்து சமஷ்டி ஆட்சிகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
யாருடைய மகிழ்ச்சிக்காக நாட்டை துண்டுகளாக பிரிக்க முயற்சிக்கின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல்,மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.