- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்.
- இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 10
நல்லெண்ணெய் – 150 மில்லி
சீரகம் – சிறிது
வறுக்க
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 15
தனியா – 1/4 கப்
வேர்கடலை – 4 ஸ்பூன்
எள் – 2 ஸ்பூன்
வறுத்ததுடன் சேர்த்து அரைக்க :
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தோலுடன் பூண்டு – 1
கருவேப்பிலை – 1 கைப்பிடி
புளி – நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்)
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு தனி தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
பின்னர் அதனுடன் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்.
கத்திரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலாவை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.