ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை பிளஸ் சந்தாதாரர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதே போன்று ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் மின்சாதன பொருட்களுக்கும் அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போன் சலுகை மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ரெட்மி நோட் 11SE – இந்திய சந்தையில் ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 12 ஆயிரத்து 249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா மோட்டோ ஜி5 – ரூ. 17 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான மோட்டோரோலா மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 12 ஆயிரத்து 999-க்கு கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F13 – ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனினை ரூ. 15 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது.
விவோ T1 44W – இந்திய சந்தையில் ரூ. 19 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1 44W ஸ்மார்ட்போன் தற்போது ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ. 13 ஆயிரத்து 499 விலைக்கு கிடைக்கிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது விவோ T1 44W மாடலை ரூ. 12 ஆயிரத்து 850 விலைக்கும் வாங்கிட முடியும்.
ஒப்போ K10 5ஜி – 64MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஒப்போ K10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ரூ. 25 ஆயிரத்து 999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ K10 5ஜி தற்போது ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.