Loading...
நாட்டிற்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றதரும் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதியின் வருமானம்
கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் வருமானம் 825 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
Loading...
எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மேற்குறிப்பிட்ட வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கடந்த வருடத்தில் குறித்த காலப்பகுதியில், 882 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
Loading...